மாணவர் அனுமதி
தமிழ் வகுப்பிற்கு 01 September இல் 4வயது ஆகவும் ஆங்கிலப் பாடசாலையில் RECEPTION படிக்கும் மாணவர்களிலிருந்தும்,
கலைவகுப்புகளுக்கு 5 வயதிலிருந்தும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
அறிமுகவகுப்பு – புதிதாக எமது கல்விக்கூடத்தில் இணையும் மழலையர் நிலைக்கு மேற்பட்ட வயது எல்லையை உடைய மாணவர்கள் இவ் அறிமுகவகுப்பில் உள்வாங்கப்பட்டு பின்பு அவர்களின் தமிழ்மொழி நிலையை கருத்திற்கொண்டு அவர்கள் உரிய வகுப்பில் சேர்க்கப்படுவர். அன்றேல் அவர்கட்கு ஆரம்ப எழுத்துக்கள் அறிமுகப்பயிற்சி நிலையான மழலையர் நிலையிலிருந்து கற்பிக்கப்படுவர்.
எமது பள்ளியில் நடைபெறும் வகுப்புகள்
தமிழ் வகுப்புகள்
* மழலையர் நிலை
* பாலர் நிலை
* வளர் தமிழ் 1>2>3>4>5>6>7>8>9>10>11>12>GCSE O/L தமிழ் , GCE A/L தமிழ்
கலை வகுப்புகள்
* நடனவகுப்புகள்
* சங்கீதவகுப்புகள்
* வயலின் வகுப்புகள்
* மிருதங்க வகுப்புகள்
உதவிப்பாடங்கள் :
* கணித,ஆங்கில வகுப்புகள் – year 1 – 6 classes
